இரண்டாம் அற்புதம்
51-07-22

16 px

1. நம்முடைய சகோதரன் வாசித்த அந்தக் கடிதத்தின் நிமித்தமாகவும், இங்கே நம்மோடிருக்கும் நமது ஊழியக்கார சகோதரர்களின் மனப்பான்மையின் நிமித்தமாகவும், சுற்றிலுமுள்ள சபையோருக்காகவும், நீங்கள் கைதட்டி பாராட்டினதற்காகவும் உங்கள் எல்லாரையும் குறித்து அவ்விதமான ஏதோவொன்றைக் கேட்பதென்பது மிகவும் நன்றாக உணரச் செய்கிறது, அது மறுபடியும் திரும்பி வர வேண்டும் என்ற இரட்டிப்பான வரவேற்பை நாங்கள் உணரும்படி செய்கிறது. நல்லவராகிய கர்த்தருக்குச் சித்தமானால், எங்களுக்குத் தருணம் கிடைத்தவுடனே, அதிக காலம் தங்கியிருக்கும்படி நாங்கள் இந்தப் பட்டணத்திற்குத் திரும்பி வருவோம், அந்தக் காரியம் முடியும் வரையில். அது போதும் என்று தேவன் எங்களிடம் சொல்லும் வரையில், அதுதான் வீட்டிற்குப் போவதற்கான நேரம். அந்த... ளசபையார் கைதட்டுகிறார்கள் - ஆசிரியர்.ன உங்களுக்கு தயவான நன்றிகள். இந்தக் கூட்டம் எங்களுக்கு எவ்வளவு ஆசீர்வாதமாக இருந்ததோ அவ்வளவு ஆசீர்வாதமாக உங்களுக்கும் இருந்து வருகிறது என்று நம்புகிறேன். நான் இதைக் கூறுகிறேன், அங்கே நான் இதைக் கூற வேண்டியதில்லை, ஆனால் இது சத்தியம் என்ற காரணத்தினால் நான் இதைக் கூறுகிறேன். நிச்சயமாகவே எனக்கு பெரிய கூட்டம் (Crowd) இருந்தது, பெரிய இடங்களையும் நான் கொண்டிருந்தேன், நாங்கள் அவர்களைக் கவனித்துக் கொள்ளும்படியான இடம் எங்களுக்கு உண்டாயிருந்திருக்குமானால், எங்களுக்கு பெருங்கூட்டம் உண்டாயிருந்திருக்கும். ஆனால் நான் அதை ஒருபோதும் சந்திக்கவேயில்லை, அல்லது (அப்படிப்பட்ட) ஒரு அருமையான கூட்டத்தில் இருந்ததில்லை, இந்த இடத்தில் நான் சந்தித்த ஜனங்களைக் காட்டிலும் அருமையான ஜனங்களை உலகத்தில் எந்தவிடத்திலும் ஒருபோதும் சந்தித்ததில்லை -- சந்தித்ததேயில்லை. அது சரியே. மேலும்... ளசபையார் கைதட்டுகிறார்கள் - ஆசிரியர்.ன உங்களுக்கு நன்றி.

2. [ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.] என்னுடைய இருயத்தினுடைய. கூட்டம் ஒருபோதும் மரிக்காது என்று நம்புகிறேன், அது இயேசு வரும்வரை ஒவ்வொரு சபையிலும், ஜனங்கள் மத்தியிலும் சரியாக தொடர்ந்து ஜீவிக்கும். இந்தக் கூட்டங்களை நடத்தும்படிக்கு நாங்கள் இங்கே இருக்கும்படியான எங்களுடைய நோக்கம் அதுவாகத்தான் இருக்கிறது. எல்லாரும் மிகவும் அன்பாக இருந்து வருகிறார்கள், இந்த உஷ்ணமான கட்டிடத்தில் உட்காரும்படி நீங்கள் மிகவும் அருமையாக இருந்து வருகிறீர்கள், அது இவ்விதமாக மிகவும் உஷ்ணமாக உள்ளது, நீங்கள் அப்படியே பக்கங்கள் நெடுகிலும் நின்று கொண்டிருக்கிறீர்கள், மேலும் வாசல்களைச் சுற்றிலும் சோர்வோடேயிருக்கிறீர்கள், மேலும் முன்கூட்டியே உள்ளே வந்து விடுகிறீர்கள்; ஓ, அது உங்களைக் குறித்த மிகவும் அருமையான காரியமாக உள்ளது. நாங்கள் அதைப் பாராட்டுகிறோம். நாங்கள் இந்தச் சகோதரனைப் பாராட்டுகிறோம், பாதி நேரங்களில் அவருடைய பெயரை நினைவுக்குக் கொண்டு வர என்னால் முடிவதில்லை, இங்கேயிருக்கும் சகோதரன் பேனர் மற்றும் ஒத்துழைப்புக் கொடுத்த எல்லா உழியக்காரர்களும். சகோதரர்களாகிய உங்களுக்காக நாங்கள் தேவனுக்கு நன்றி செலுத்துகிறோம். நீங்கள் எங்களுக்கு மிகவும் நல்லவர்களாக இருந்து வருகிறீர்கள். தேவன் தம்முடைய ஆசீர்வாதங்களை எங்கிலுமுள்ள உங்கள் எல்லார் மேலும் ஊற்றுவார் என்று நாங்கள் நம்புகிறோம்...?...

3. அங்கேயுள்ள ஜனங்களாகிய உங்கள் எல்லாரிடமும் தான், அவர்கள் சற்று முன்பு எனக்காக ஒரு அன்பின் காணிக்கையை எடுத்ததாக அவர்கள் இப்போதுதான் என்னிடம் கூறினார்கள். நான் அதைப் பாராட்டுகிறேன். நான் அதற்குத் தகுதியுடையவன் அல்ல; அது உண்மை. நான்-நான் அதற்குத் தகுதியற்றவன். ஆனால் கடன்கள் யாவும் மற்றும் எல்லாமும் அடைக்கப்பட்டு விட்டதாக சகோதரன் பாக்ஸ்டர் கூறினார். அப்போது அவர்கள் அதைச் செய்த போது, இவர்கள் ஒரு அன்பின் காணிக்கையைப் பெற்றுக்கொண்டனர். நாங்கள் அதைப் பாராட்டுகிறோம். நான் - என்னுடைய அறிவுக்கு எட்டின வரை, எனக்குத் தெரிந்த எல்லாவற்றின்படியும், அதின் ஒவ்வொரு காசையும் (penny), தேவனுடைய மகிமைக்காகவே செலவழிப்பேன், எப்படியென்று என்னுடைய அறிவுக்கு எட்டின வரையில் அவ்வாறு செலவு செய்வேன். அந்தப் பணமானது முட்டாள்தனமான ஒரு காரியத்திற்கும் போகாது. அதற்குக் காரணம் என்னவென்றால், அந்நாளில் நல்லதும் அவருடைய நன்மையின் மிகவும் உண்மையுள்ள உக்கிராணக்காரனுமாக காணப்பட வேண்டும் என்றே நாங்கள் விரும்புகிறோம். உங்களில் சிலர் அதைச் செலுத்தி விட்டீர்கள், அது ஒருக்கால் உங்கள் ஜீவனத்தினுடைய ஒரு பாகமாக இருக்கலாம்; நீங்கள் அதைச் செய்ய வேண்டாம் என்பது தான் எனது-எனது விருப்பம். வெறுமனே ஏதாவது ஒருவர், அவர்கள் ஒரு அன்பின் காணிக்கையை எடுத்துக்கொண்டிருக்கும் போது, என்னால்-என்னால் முடிந்த ஒரு நிக்கல் நாணயத்தையோ அல்லது ஏதோவொன்றையோ போட்டு விடலாம், அது உங்களுக்குத் தெரியும், வெறுமனே ஏதோவொன்றைப் போடலாம். எனக்கு சில பிள்ளைகள் இருக்கிறார்கள், அது எப்படி என்று உங்களுக்குத் தெரியும். ஆனால் நான் அதைச் செய்ய வேண்டியிருக்கவில்லை என்று விரும்புகிறேன், ஆனால், அதற்கு ஒருவர் தேவை எனும் போது, ஆனால் நான் எப்போதாவது தான் அதைச் செய்கிறேன், ஏனென்றால் நான் வெறுமனே, ஜீவனத்திற்கு போதுமான பணத்தையும் உங்களால் சம்பாதிக்க முடியாது. ஆனால் நாங்கள் அதற்காக உங்களுக்கு நன்றி கூறுகிறோம். உங்கள் யாவரையும் தேவன் ஆசீர்வதிப்பாராக.

4. இப்பொழுது நான் நம்புகிறேன்... நான் வழக்கமாக ஒரு கூட்டத்தில் இருக்கும் போது கூறும் ஒரு சிறு கதையைக் குறித்து எனக்கு ஞாபகம் வருகிறது, என்னுடைய வயதான சகோதரன் இங்கே உட்கார்ந்து கொண்டிருக்கிறார், நான் இந்த ஊழியத்தைத் துவங்குவதற்கு முன்பாக, அல்லது... வார்த்தையைக் குறித்து ஊழியம் செய்வதற்கு முன்பாக, அவருடைய கரத்தைக் குலுக்க விரும்புகிறேன். ஒருசமயம் என்னுடைய சபையில் காணிக்கை எடுக்கப் போவதாக இருந்தேன். நான் அதை என்னுடைய மனைவியிடம் கூறினேன், நான், ‘நாம் அப்படியே... அதைக் கொண்டிருந்தாக வேண்டும்’ என்றேன். என்னுடைய ஜீவியத்தில் நானாகவே ஒரு காணிக்கையும் எடுத்ததே கிடையாது. நான், ‘நாம் கொஞ்சம் பணத்தைக் கொண்டிருக்க வேண்டியுள்ளது. நான் உங்களிடம் கூறுவேன், நான் எடுப்பேன்...’ என்றேன். நாங்கள் கடன்பட்டிருந்தோம், நாங்கள் அதைச் செலுத்த வேண்டியிருந்தது. அவ்விதமாய் அது என்னுடைய முந்திய மனைவி, அது... நான்... அவள் பல வருடங்களுக்கு முன்பே, ஏறக்குறைய 14 வருடங்களுக்கு முன்பே மரித்து விட்டாள். நான் சுமார் ஐந்து அல்லது ஆறு வருடங்களாக திருமணம் ஆகாமலேயே தனித்து வசித்து வந்தேன். என்னுடைய சிறிய மகன் பள்ளிக்குப் போகத் தொடங்கினான், நான் மறுபடியும் விவாகம் செய்து கொண்டேன். தேவன் சற்று முன்பு என்னை விட்டு எடுத்துப்போட்ட அந்தச் சிறு பெண்ணின் பரிபூரண சாயலை தேவன் திரும்ப எனக்குக் கொடுத்தார். எனவே அதைக் குறித்து நான் மிகவும் சந்தோஷமாயிருக்கிறேன்.

5. அப்போது, ஒரு இரவு என்னுடைய ஞாபகத்துக்கு வருகிறது, அது ஏறக்குறைய எட்டு வருடங்களுக்கு முன்பு என்று நினைக்கிறேன், நாங்கள் காரியங்களைப் போகும்படி செய்ய முடியாத ஒரு நிலைக்கு நாங்கள் வர வேண்டியிருந்தது. நான், ‘நான் காணிக்கை எடுக்கப் போகிறேன்’ என்றேன். அவள், ‘நான் உட்கார்ந்து உங்களைக் கவனிக்கப் போகிறேன்’ என்றாள். எனவே, நான் சென்று, வயதான சகோதரன் வைஸ்ஹார்ட் அவர்களிடம், ‘போய் என்னுடைய தொப்பியை எடுத்துக்கொண்டு வாருங்கள்; நான் காணிக்கை எடுக்கப் போகிறேன்’ என்றேன். அவர் என்னை மிகவும் வினோதமாகப் பார்த்து விட்டு... தொடங்கினார். நான் கீழே நோக்கிப் பார்த்தேன்... சகோதரன் ரையான் அவர்கள், உங்களுக்கு சகோதரி வெபர் அவர்களை எப்பொழுதாவது தெரியும் என்றோ, அவர்களை ஞாபகம் உள்ளதா அல்லது இல்லையா என்றோ எனக்குத் தெரியவில்லை, அவர்கள் ஃபிராங்கியின் தாயார். அவர்கள் அந்தச் சிறிய பழைய பல்வண்ணக் கட்டம் போட்ட மேல்வஸ்திரத்தின் கீழாக சென்று, ஒரு சிறு பணப்பையை வெளியே எடுத்தார்கள், உங்களுக்குத் தெரியும், அதன் மேல் பகுதியில் சிறிய பொருத்தும் பகுதி இருந்தது, அவர்கள் அந்தச் சிறு அமெரிக்க நாணயங்களை வெளியே எடுக்கத் தொடங்கினார்கள். ஓ, என்னால் அதைச் செய்ய முடியவில்லை. நான், ‘(காணிக்கை கொடுக்கும்படி) நான் உங்களைத் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தேன், நான் அதை அவ்வாறு செய்யக் கருதவில்லை’ என்றேன். எனவே, சகோதரன் வைஸ்கார்ட் மிக வினோதமாக என்னைப் பார்த்து விட்டுப் போய் எனது தொப்பியை தலைகீழாக கவிழ்த்தார். என்னவென்று உங்களுக்குத் தெரியுமா? சகோதரன் ரையான் அவர்கள் என்னுடைய வீட்டிற்கு ஒரு மிதி வண்டியை ஓட்டிக்கொண்டு வந்திருந்தார், அவர் அதை என்னிடம் கொடுத்து விட்டார். உங்களில் அநேகர் நான் அதைக் குறிப்பிட்டதைக் கேட்கும்படி கூட்டத்தில் இருந்திருக்கிறீர்கள். சகோதரன் ரையான் அவர்கள் அங்கே ஒரு மிதி வண்டியை ஓட்டிக்கொண்டு வந்திருந்தார், அதை அப்படியே அங்கேயே விட்டு விட்டு, அதை எனக்குக் கொடுத்தார். நான் அந்த மிதிவண்டிக்கு வண்ணந்தீட்டி, அதை விற்றேன், அந்தக் கடனை முழுவதுமாக அடைக்க எனக்குப் பணம் கிடைத்து விட்டது...?... அவை எல்லாவற்றிற்கும் பிறகு அது எனக்கு அவசியமாயிருக்கவில்லை...?...

6. என்னே, பரிதாபத்திற்குரிய சகோதரனே, அவர் எனக்கு மிதிவண்டியைக் கொடுத்தார், உண்மையில், அந்த மிதிவண்டியை ஓட்டிச்செல்ல என்னால் முடியாதிருந்தது, எனவே ஹ-ஹ-ஹ. நான் கடன்பட்டிருந்தேன். அவர் நல்லதொரு செயலைச் செய்திருந்தார். நல்லது, கர்த்தருக்கு ஸ்தோத்திரம். அது மிகவும் அருமையாக உள்ளது. எனவே நான் உங்களுக்கு கனிவான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அது உண்மையிலேயே முழு உத்தமத்தோடு செய்யப்பட்டு இருக்கிறது, என்னால் கூடுமானவரை விரைவில், நான் டுலிடோவிற்குத் திரும்பி வரலாம் என்று நம்புகிறேன். இப்பொழுது, கர்த்தருக்குச் சித்தமானால், நான் ஆப்பிரிக்காவை விட்டு வீட்டிற்கு வரும் போது, அடுத்து எங்கே போவது என்று கண்டுபிடிக்கும்படியாக நான் அவருடைய முகத்தைத் தேட வெளியே போகிறேன். நீங்கள் சரியாக எங்கே போக வேண்டுமென்று அறிவீர்களானால், நீங்கள் எல்லாரும் அதை அதிகமாக பாராட்டுவீர்கள் என்று நம்புகிறேன். அவர் என்னை டுலிடோவிற்கு அனுப்புவாரானால், அவர், ‘நீ வேறு ஓரிடத்திற்குப் போ’ என்று கூறுவது வரையில், நாங்கள் டுலிடோவிலேயே தங்கியிருக்கப் போகிறோம். அது முடியும் வரையில் அங்கேயே தங்கியிருப்பேன். சரியாக இப்பொழுது, கூட்டமானது நாம் மெய்யாகவே ஒரு உண்மையான எழுப்புதலைக் கொண்டிருக்கக் கூடும்படியான ஒரு நிலையில் உள்ளது, சரியாக இப்பொழுதே அவ்விதம் உள்ளது. உங்களுக்குப் புரிகிறதா? ஜனங்கள், ‘நல்லது, அது ஒருக்கால் இதுவாக இருக்கலாம், அது ஒருக்கால் அதுவாக இருக்கலாம்’ என்று கூறுகிற பயமுறுத்தும் உணர்ச்சிகள் எல்லாம் (இருந்தன). ஆனால் இப்பொழுது அதெல்லாம் போய் விட்டன; இது அப்படியே எல்லாவிடங்களிலும் ஒரு மகத்தான பெரிய வரவேற்கும் உணர்வுதான் இருக்கிறது. நீங்கள் அதைக் காண்கிறீர்களா? இப்பொழுது, அதுதான் ஒரு எழுப்புதலைக் கொண்டிருப்பதற்கான சரியான வழியாக உள்ளது, உண்மையில் ஒரு எழுப்புதலைத் தொடங்க அதுதான் சரியான வழி. இப்பொழுது, இது ஏறக்குறைய நான்கு முதல் ஆறு வாரங்கள் நடப்பதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? ஓ, என்னே, அப்படியானால் நாம் ஒரு மகிமையான நேரத்தைக் கொண்டிருப்போம். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், நாம் அப்படியே ஒருவர் பின் ஒருவராக... கூடுமானால், சுற்றிலுமுள்ள ஒவ்வொரு காரியமும் சுகமடைந்து விடும் என்று நான்-நான் நம்புகிறேன்.

7. இப்பொழுது, இந்த வாரத்தில் கர்த்தர் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார். முடமானவர்கள் நடந்திருக்கிறார்கள்; நொண்டிக்கொண்டிருந்த முடவர்கள் சுகமடைந்திருக்கிறார்கள்; செவிடர்கள் கேட்டிருக்கிறார்கள், மற்றும் வியாதிகள் சுகமடைந்துள்ளன என்பது உங்களுக்குத் தெரியும், கர்த்தர்... மேலும் இப்பொழுது, நீங்கள் இதை நினைவுகூர வேண்டுமென்று நான் விரும்புகிறேன், குறிப்பாக மேய்ப்பர்கள், இதற்குப் பிறகு (அனேக) வாரங்கள் உண்டாயிருக்கும், அப்போது உங்கள் சபைகளிலுள்ள ஜனங்கள், ‘நல்லது, நான் - அது - எனக்கு இருந்த அந்த வயிற்றுக்கோளாறு என்னை விட்டுப் போய் விட்டது; எனக்குத் தெரியவில்லை’ என்று கூறுவதை நீங்கள் கேட்பீர்கள். நீங்கள் கொண்டிருக்கிற வித்தியாசமான வியாதிகளோடிருக்கும் ஸ்திரீகளும் மற்றவர்களும், அங்கே-அங்கே மிகக்குறைந்த ஜனங்கள் தான் இருந்திருக்கிறார்கள், நான் இதைக் கூறுகிறேன், தவறாக எதையும் கூற முயற்சிக்கவில்லை, ஏனென்றால் நான்-நான் அதைச் செய்ய விரும்பவில்லை, தேவன் என்னைப் பொறுப்பாளியாக வைத்திருக்கிறார். ஆனால் அங்கே குறைந்தபட்சம் 500 பேர் இருந்திருக்கிறார்கள், அது குறைந்த அளவு கணக்கு தான் என்று கூறுகிறேன், அது கூட்டத்தில் உட்கார்ந்து கொண்டு, அதைக் குறித்து ஒரு வார்த்தையும் ஒருபோதும் கூறாமல், சரியாக இப்பொழுது சுகமடைந்தவர்கள். இப்பொழுது, அது சரியே.

8. அன்றொரு இரவில்... கடந்த இரண்டு இரவுகளிலும் நான் கொண்டிருந்த இழுப்பானது என்னுடைய முழு ஜீவியத்திலும் அப்படிப்பட்ட ஒரு இழுப்பை நான் ஒருபோதும் உணர்ந்ததேயில்லை. இப்பொழுது, உணர்ந்து கொள்ளும் விதமானது... சகோதரனே, ஒரு நிமிடம் இங்கே வாருங்கள். ஜனங்கள் சுகமடையும் போது... இப்பொழுது, நான் இதை விளக்கிக் கூற இந்த நேரத்தை எடுத்துக்கொள்ள விரும்புகிறேன். நான் ஒரு நபரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, நான் திரும்பி அவர்களுடைய கவனத்தைக் கவர்ந்து கொள்கிறேன். வெளியே சபையோரில் இருப்பதைப் போன்று, நான் யாராவது ஒருவரை நோக்கிப் பார்ப்பேன் என்றால், அது ஒருக்கால் தயவாகக் தோன்றலாம், நல்லது, அப்போது அந்த நபரிடம் பேசும்படியாக நான் போவேன். நான் பேசும்படி போகும் போது, நான் அவர்களுடைய ஆவியோடு தொடர்பு ஏற்படுத்திக்கொள்கிறேன். அப்போது அங்கே ஏதோவொன்று இழுக்கத் துவங்குவது போன்று, அப்படியே இவ்விதமாகத் தோன்றுகிறது. அதன்பிறகு, அது குறையும் போது, நான் மிகவும் பலவீனமடைந்து விடுகிறேன். அந்த நபரோ சுகமடைந்து விடுகிறார். இப்பொழுது அவ்வளவு தான். சகோதரனே, உமக்கு நன்றி. அந்த-அந்த நபர் சுகமடைந்து விடுகிறார். அவர்கள் சரியாக அப்பொழுதே ஒருக்கால் அதைக் கண்டுணராமல் இருக்கலாம், ஆனால் அதன்பிறகு அவர்கள் அதை அடையாளம் கண்டுகொள்வார்கள். அது செய்யப்பட்டதை அவர்கள் அடையாளம் கண்டுகொள்வார்கள். இப்பொழுது, நல்லவராகிய கர்த்தர் தாமே உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. கர்த்தர் தம்முடைய நன்மையினாலும் இரக்கத்தினாலும் உங்களை நிரப்புவாராக. இங்கே நெடுகிலும் உட்கார்ந்து கொண்டிருக்கும் நீங்கள் எல்லாரும், இங்கே முடமானவர்களுடைய இந்த மூன்று அல்லது நான்கு நாற்காலிகள் இருப்பதை நான் காண்கிறேன், வித்தியாசமான வியாதிகளோடு அவதிப்பட்டும் மற்றும் எல்லாமுமாய் இருக்கும் ஜனங்களும் (இங்கே இருக்கிறார்கள்.) இப்பொழுது, நீங்கள் திடமனதாயிருந்து, உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள், தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் சுகமாக்கப் போகிறார்.

9. அதோ அங்கே பின்னால் யாராவது இப்பொழுது வரை கிடக்கிறார்களா என்பது எனக்குத் தெரியவில்லை, அது அப்படியே சரியாக இங்கே கீழே இருக்கிறது. சிலசமயங்களில் அவர்களின் மேலே பார்த்து, அங்கே அதைக் கவனிக்கும் போது, நான் இந்த ஜனங்களைப் பார்ப்பதைத் தவற விட்டு விடுகிறேன். இப்பொழுது, நல்லது, மற்றவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பது எனக்குத் தெரியாது, ஆனால் உங்களோடு இருப்பதில் நான்--நான் மிகவும் சந்தோஷமாயிருக்கிறேன் என்பதை உங்களிடம் கூறுகிறேன். உங்களுடைய சொந்த சபையில் ஆராதனை இல்லாதிருக்கும் போது, ஒருக்கால் எப்பொழுதாவது ஒரு வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்குமானால், அடுத்த வாரம் எங்களோடு ஈரிக்கு (Erie) ஏறி வருவீர்கள் என்று நம்புகிறேன், நாங்கள் உங்களைக் கொண்டிருப்பதில் மகிழ்ச்சியடைவோம். எப்பொழுதாவது எனக்குக்(கடிதம்) எழுதுங்கள். வீட்டிற்கு எனக்கு எழுதுங்கள். உங்களிடமிருந்து வருவதைக் கேட்கும்படி மகிழ்ச்சியுடையவனாயிருப்பேன். சிலசமயங்களில் இந்த அபிஷேகிக்கப்பட்ட துணிகளையும் மற்றவைகளையும் வெளியே அனுப்புவதில்... அவைகளை வெளியே அனுப்புவதை எத்தனை பேர் விசுவாசிக்கிறீர்கள், அந்த...? ஓ, அது அற்புதமாயுள்ளது. நல்லது, நான் இதை உங்களிடம் கூறுகிறேன், நீங்கள் அப்படியே என்னுடைய அலுவலகத்திற்குள் சென்று, அந்தத் துணிகளை அனுப்புவதன் மூலமாக ஆயிரக்கணக்கான சுகமளித்தல்கள் நடக்கின்றன என்பதைக் காண்பீர்களானால், அப்படியே ஆயிரக்கணக்கான...

10. இங்கே சிறிது காலத்திற்கு முன்பு, வருடக்கணக்காக வலியோடு கூட மூட்டு வீக்கமும் உடையவளாய் இருந்து ஜெர்மனியில் (வசித்துக் கொண்டிருந்த) ஒரு பெண்மணியிடம் அதில் ஒன்றை நான் அனுப்பினேன். அதன் பின்னால் அவளுடைய ஜெர்மன் பாஷை - பாஷையில் மொழிபெயர்க்கப்பட்டு எழுதப்பட்டிருந்தது. அவள் அந்தத் துணியைப் பற்றிப்பிடித்து, அதை தன்மேல் குண்டூசியினால் இணைத்துக்கொண்டு, அந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றி, அவள், ‘இப்பொழுது, பிசாசே, வெளியே போ’ என்றாள். பிறகு அவள் எழுந்து. தரையில் நடந்தாள்; அவள்... பாருங்கள்? ‘இப்பொழுது, பிசாசே, வெளியே போ.’ இப்பொழுது, அவள் அதை அப்படியே விசுவாசித்தாள். ஒரு சிறிய ஏதோவொன்று, இந்த சாட்சியை கூட்டத்தினர் முன்பாக சற்று நேரம் நான் கூறுவதால், நீங்கள் அதற்காக என்னை மன்னிப்பீர்கள் என்று நான்-நான் நம்புகிறேன், ஏனென்றால் சிலசமயங்களில் நான் வித்தியாசமான இடங்களைச் சுற்றிலுமுள்ளவற்றையும் கூறுகிறேன், இந்தக் கூட்டங்களில் இருந்து வருகிற ஜனங்களை நான் அறியேன்.

11. அதில் மிகச்சிறந்த ஒன்று என்னவென்றால், ஒரு இரவில் காணிங், ஆர்கன்ஸாஸில் நடந்த ஒரு சிறு சபை கூட்டத்தில் நான் இருந்த போது தான், அது அப்பொழுது தான் துவங்கியிருந்தது. நான் வழக்கமாக கைக்குட்டைகளை எடுத்து அனுப்புகிறேன், ஜனங்களுக்கும் கொடுக்கிறேன், மேலும் இந்தக் கூட்டங்களில்; இங்கே இருப்பது போன்று, இதோ அவைகளைக் கொண்ட ஒரு பெட்டியே இருக்கிறது. இவ்விதமாக அவர்களுக்கு ஊழியம் செய்ய எனக்கு ஒரு வாய்ப்பும் கிடைக்கவில்லை, ஏனென்றால் கூட்டங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் போது, நான் எப்போதுமே ஜெபத்தில் முழு கவனம் செலுத்தி, ஜெபித்துக் கொண்டிருக்கிறேன். அதன்பிறகு நான் வீட்டிற்குப் போகும் போது, அன்றொரு நாள் சகோதரன் பாக்ஸ்டர் அவர்கள் என்னோடு கூட இருந்தார், நான் போகும்படியாக அந்த மலைகளின் பின்புறத்தில் எனக்கு ஒரு குகை இருக்கிறது. அந்தக் காலடிப்பாதையில் தூதனானவரை நான் சந்தித்த இடத்தை அவருக்குக் காண்பித்தேன். நான் முழுவதும் தகர்ந்து போனவனாய் அங்கே பின்புறத்தில் போய்க் கொண்டிருந்த போது, அந்தப் பாதையில் நான் அவரைச் சந்தித்தேன். அவர் என்னிடம், ‘நீ உன்னுடைய கார் பக்கமாகத் திரும்பிச் செல், எர்ன் பாக்ஸ்டரோடு இருக்கும்படியாக நான் உன்னை அழைத்தேன்’ என்றார். நாங்கள் ஒன்றாக இருந்து வருகையில், நான் அவரிடம் சென்றேன்.

12. எனவே, சரியாக அந்த இடத்திலேயே, நான் அங்கே திரும்பிச் சென்று, நான் ஜனங்களுக்கு அனுப்புகிற ஒவ்வொரு துண்டு பொருட்களின் பேரிலும் மணிக்கணக்காக ஜெபித்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது, நான் கைக்குட்டைகளை அனுப்புவதில்லை, ஏனென்றால் அதில் ஒவ்வொன்றுக்கும் ஏறக்குறைய பத்து சென்டுகள் செலவாகிறது, வாரத்திற்கு 5000, 6000, 7000 என்று நாங்கள் சுற்றிலும், ஓ, எங்காவது அனுப்பி வைக்கிறோம். அதைச் செய்ய என்னிடம் பணம் இல்லை. ஆனால் நான் நூற்று நூற்றுக்கணக்கான கெஜம் தூரமுள்ள ரிப்பனை (நாடாவை) விலைக்கு வாங்கி, இவ்விதமாக சிறு துண்டுகளாக அதை வெட்டுகிறோம், எனவே ஜனங்கள் அதை தங்கள் உடைகளின் மேல் இணைத்து வைக்க (pin) முடியும். அதில் ஒன்றை நான் உங்களுக்கு அனுப்புவதில் சந்தோஷமாயிருப்பேன். உங்களுக்கு சரியாக இப்பொழுது அது தேவையில்லை என்றால், அதை வேதாகமத்தில் அப்போஸ்தலர் 19ம் அதிகாரத்தில் வையுங்கள், அதை அப்படியே அங்கேயே வைத்துக்கொள்ளுங்கள். ஒரு அவசர நெருக்கடி நிலை எழும்புமானால், அதை எடுத்து, கொடிய இருமலோடு கூடிய காற்றுக்குழல் அழற்சி நோயினால் (croup) பாதிக்கப்பட்ட உங்கள் பிள்ளையின் மேலோ அல்லது எது நடந்திருந்தாலும் அதின் மேல் வைத்து, தேவனை விசுவாசியுங்கள். அது இந்தக் கூட்டத்தில் அவருடைய அன்புக்கான ஒரு சிறிய அடையாளமாக இருக்கிறது. அநேக காரியங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அது இலவசமாகும், வெறுமனே அதை அனுப்பி வைக்கிறோம், அதை உங்களுக்கு அனுப்புவதில் நாங்கள் மகிழ்ச்சியடைவோம்.

13. இப்பொழுது, நான் - நான் இந்த பெண்மணிக்கு ஒரு கைக்குட்டையை கொடுக்க வேண்டுமென்று அவள் விரும்பினாள், நான் அவளுக்கு அதைக் கொடுத்தேன், அவள், ‘இந்தக் கைக்குட்டையை ஆசீர்வதியும்’ என்றாள். இப்பொழுது, அநேக ஜனங்கள் அவைகளை அபிஷேகிக்கிறார்கள். அதெல்லாம் சரிதான். தேவன் ஆசீர்வதிக்கிற எதுவாக இருந்தாலும், நான் அதற்காகவே இருக்கிறேன். ஆனால் நீங்கள் வேதவாக்கியத்தைக் கவனிப்பீர்களானால், பவுல் அவைகளை அபிஷேகிக்கவில்லை, அவன் அவைகளை தன்னுடைய சரீரத்தை விட்டு எடுத்தான் (புரிகிறதா?), அவன் வெறுமனே அவைகளைத் தன்னுடைய சரீரத்தை விட்டு எடுத்தான். அதுவே சரி என்று நான் விசுவாசிக்கிறேன், இல்லையா, சகோதரர்களே? பவுல் அறிந்திருந்தான்... சகோதரனே, அவன் அதை எங்கிருந்து பெற்றுக் கொண்டான் என்று நான் நினைக்கிறேன் என்பது உமக்குத் தெரியுமா? எலியா அதை எடுத்து (இவ்வாறு) கூறின போது தான் என்று நான் நினைக்கிறேன், அவன், ‘என் தடியைப் பிடித்துக் கொண்டு போய், அதை அந்தப் பிள்ளையின் மேல் வை’ என்று கூறினான். உங்களுக்குப் புரிகிறதா? எலியா, தான் தொட்ட யாவுமே ஆசீர்வதிக்கப்பட்டன என்பதை அறிந்திருந்தான். ஆனால் அந்தப் பெண்மணி அதை விசுவாசித்தாளா இல்லையா என்பது... பவுல் உறுமால்களையும் (கைக்குட்டைகளையும்), கச்சைகளையும் தன்னுடைய சரீரத்திலிருந்து எடுத்து, அதை வியாதிக்காரர் மேல் போட, அசுத்த ஆவிகள் அவர்களை விட்டுப் புறப்பட்டன, வியாதிகளும் சுகமாயின. இப்பொழுது, அது பவுலாய் இருக்கவில்லை, அது தேவனாய் இருந்தது. அது தம்முடைய ஊழியக்காரன் மேல் ஜனங்களுக்கிருக்கிற விசுவாசத்தைக் கனப்படுத்துகிற தேவனாய் இருக்கிறது. நல்லது இப்பொழுது, அங்கேயிருந்த அதே தேவன் தான், நான் பரிசுத்த பவுல் அல்ல, நம்மில் யாருமே பரிசுத்த பவுல் அல்ல, ஆனால் அவர் இன்னும் அதே இயேசுவாக இருக்கிறார். உங்களுக்குப் புரிகிறதா? எப்படியும் அது இருக்கவில்லை - அது பரிசுத்த பவுலாய் இருக்கவில்லை, ஆனால் அது இயேசுவாக இருந்தது.

14. இப்பொழுது, இந்தப் பெண்மணி அதை எடுத்து, தன்னுடைய வேதாகமத்தில் அதை வைத்தாள். அதற்கும் ஒரு சில வாரங்கள் கழித்து, அவள் ஒரு விளக்கின் சிம்னியை (Iamp Chimney - எண்ணையில் எரியும் விளக்குக்குப் பாதுகாப்பாக இருக்கும் குழல் போன்ற கண்ணாடி சாதனம்) சுத்தம் செய்து கொண்டிருந்தாள், அவள் அங்கே பின்னால் ஆர்கன்ஸாஸில் பருத்தி பயிரிடும் தேசத்தில் (Cotton Country) இருந்தாள், (அவள் அவ்வாறு சுத்தம் செய்து கொண்டிருந்த போது), அந்தப் பழைய விளக்கிலிருந்த சிம்னியின் கண்ணாடி உடைந்து அவளுடைய கையின் இரத்தக் குழாயை வெட்டிப் போட்டது. இப்பொழுது, இதுதான் அவளுடைய கதை. அவளிடம் ஒரு தலையணை உறை (pillow slip) இருந்தது, அதை வெட்டுப்பட்ட கையின் மேல் வைத்துப் பிடித்தாள், அது அப்படியே இரத்தத்தினால் ஈரமாகி விட்டது. அவளிடம் ஒரு நீண்ட துணி இருந்தது. அவளுடைய நெருங்கிய அண்டை வீட்டார் இரண்டு மைல்கள் தொலைவில் இருந்தனர்; அவளுடைய கணவனும் பட்டணத்தில் இருந்தான். அவளிடமிருந்து இரத்தம் வெளியேறிக் கொண்டிருந்தது, அவள் பெலவீனமாகிக் கொண்டேயிருந்தாள், ஏதாவது நடக்காவிட்டால், அவள் சீக்கிரத்தில் மரிக்கப் போகிறாள் என்பதை அறிந்து கொண்டாள். அப்போது அந்தக் கைக்குட்டையைக் குறித்த நினைவு அவளுக்கு வந்தது; அவள் போய் அந்தக் கைக்குட்டையை எடுத்து அங்கே வெட்டுப்பட்ட அந்த காயத்தின் மேல் அதை வைத்தாள். இப்பொழுது, இதோ அவளுடைய சாட்சி. அந்த சாயங்காலத்தில் அவளுடைய கணவன் வந்த போது... அவள் ஏறக்குறைய இரண்டு மைல்கள் அல்லது அதற்கும் அதிகமான தூரம், புதைமிதியடியை (boots) அணிந்து கொண்டு சேறு வழியாக ஆழமற்ற நீரில் நடந்து வந்து, ஒரு கண்ணாடிக் கூட்டு விளக்கை (lantern) மரத்தில் தொங்க விட்டு விட்டு, கிரேஹவுண்ட் பேருந்தைப் பிடித்து, நான் கூட்டம் நடத்திக் கொண்டிருந்த லிட்டில் ராக்கிற்கு வந்து இந்த புதைமிதியடியை அணிந்தவாறே உள்ளே நடந்து வந்து, இந்தக் கைக்குட்டையைப் பிடித்தவாறு தேவனை ஸ்தோத்தரித்தாள். அந்த கைக்குட்டை அழுக்காக கூட இல்லை, அது அப்படியே ஒரு அற்புதமாக இருந்தது, அது சரியாக அவ்விதமாக இரத்தம் வழிவதை நிறுத்தி விட்டிருந்தது. அந்தப் பெண்மணி மரித்துக் கொண்டிருந்தாள்; அவள் சென்று அவ்விதமாக (செய்ய) முடிந்த ஒரே காரியம் அது மாத்திரமே, அவள் அதைக் குறித்து அறிந்திருந்தாள், அவள் அவ்வாறு செய்த போது, தேவன் அவளுடைய விசுவாசத்தைக் கனப்படுத்தினார்.

15. இப்பொழுது, நாம், நாம் எல்லாருமே, நாம் அதை விசுவாசிக்கிறோம். நான் அதனோடு ஒரு சிறு காரியத்தையும் அனுப்பினேன்; உங்களுடைய மேய்ப்பரை நீங்கள் எவ்வாறு பெற்றுக்கொள்வது என்றும், அவரை எவ்வாறு வரும்படி செய்வது என்பதையும் அது உங்களுக்குக் கூறும். உங்கள் குற்றங்களை அறிக்கையிட்டு, எல்லாவற்றையும் அகற்றிப் போட்டு விட்டு, பிறகு அங்கே அதன்மேல் அதை வையுங்கள். வழியில் எதுவுமே இல்லை எனும் போது, தேவன் அதைச் செய்வார். நீங்கள் அதை விசுவாசிக்கவில்லையா? இப்பொழுது, தேவன் உங்களோடு இருப்பாராக. மேய்ப்பர்கள் முதல் உடன்வேலையாட்களுக்கும், எங்கள் வாசல்களிலுள்ள அந்நியர்களுக்கும், இங்கே இந்த அரங்கத்திலுள்ள பாதுகாவலர்களுக்கும், வாசல்காப்போன்கள் எல்லாருக்கும், மறுபடியுமாக உங்களுக்கு நன்றி கூறுகிறேன், நீங்கள் எல்லாரும் அற்புதமாக இருந்து வருகிறீர்கள், தேவனுடைய முழு நிறைவான ஆசீர்வாதங்கள் தாமே உங்கள் எல்லார் மேலும் இருப்பதாக. நான் அதோ அங்கிருக்கிற அவ்விடத்தில் வேறு யாரோ ஒருவருக்காக ஜெபிக்கும்படி போகையில் எனக்காக ஜெபித்துக்கொள்ளுங்கள். நாம் கூட்டத்தைத் துவங்குவதற்கு முன்பு, கொஞ்சம் வேதவாக்கியத்தை வாசிக்க விரும்புகிறேன். அதற்குக் காரணம் என்னவென்றால், இன்றிரவு நம்மால் எவ்வளவு கூடுமோ அவ்வளவு நேரம், ஜெப வரிசையில் நிறைய நேரத்தை எடுத்துக்கொள்ள விரும்புகிறோம். இதற்குப் பிறகு உடனடியாக, நான் கிரேஹவுண்ட் பேருந்தைப் பிடிக்க வேண்டியுள்ளது... காலை நேரம் முழுவதும் என்னுடைய தலையை முட்டி மோதியும், என்னால் ஒரு முன்பதிவைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை. நான் வீட்டிற்குப் போயாக வேண்டியிருக்கிறது, மனைவி இங்கே வர முயற்சிக்கப் போகிறாள், அவளால் இங்கே வர முடியவில்லை, அவளை அழைத்து வர யாரும் இல்லை. எனவே, அவளை அழைத்து வர நான் இன்றிரவு போக வேண்டியிருக்கிறது, பிறகு நாளைக்குத் திரும்பி வந்து, ஈரியிலேயே இருப்போம். எனவே நான் பரிசுத்த யோவான் 4:46ல் காணும் இந்த வேதவாக்கியம் துவங்கி வாசிக்கையில், இப்பொழுது எனக்காக ஜெபம் பண்ணுங்கள்: பின்பு, இயேசு தாம் தண்ணீரைத் திராட்சரசமாக்கின கலிலேயாவிலுள்ள கானா ஊருக்கு மறுபடியும் வந்தார்; அப்பொழுது கப்பர்நகூமிலே ராஜாவின் மனுஷரில் ஒருவனுடைய குமாரன் வியாதியாயிருந்தான். இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தாரென்று அந்த மனுஷன் கேள்விப்பட்டபோது, அவரிடத்திற்குப் போய், தன் மகன் மரண அவஸ்தையாயிருந்தபடியினாலே, அவனைக் குணமாக்கும்படிக்கு வரவேண்டுமென்று அவரை வேண்டிக்கொண்டான். அப்பொழுது இயேசு அவனை நோக்கி:... (இப்பொழுது, கூர்ந்து கவனியுங்கள்.)... ளஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.ன நீங்கள் அடையாளங்களையும் அற்புதங்களையும் காணாவிட்டால் விசுவாசிக்கமாட்டீர்கள் என்றார். (ஆனால் இந்த தீரமான மனிதன் நம்முடைய எஜமானுக்குப் பதிலளிப்பதை கேளுங்கள்.) அதற்கு ராஜாவின் மனுஷன்: ஆண்டவரே, என் பிள்ளை சாகிறதற்குமுன்னே வரவேண்டும் என்றான்... இயேசு அவனை நோக்கி: நீ போகலாம், உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்றார். இப்பொழுது, தன்னுடைய குமாரனுக்காக இயேசு ஜெபிக்க வரும்படி அந்த மனுஷன் விரும்பினான், ஆனால் இயேசு அவனிடம் கூறினார்... அவர் அவனுக்காக ஜெபிக்கும்படி போகவில்லை, நீ போகலாம், உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்று அவர் கூறினார். ...அந்த மனுஷன், இயேசு சொன்ன வார்த்தையை நம்பிப்போனான். அவன் போகையில், அவனுடைய ஊழியக்காரர் அவனுக்கு எதிர்கொண்டு வந்து, உம்முடைய குமாரன் பிழைத்திருக்கிறான் என்று அறிவித்தார்கள். அவன் விசாரித்து (அவனிடம் கேட்டு)... (என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்.)... அப்பொழுது: எந்த மணிநேரத்தில் அவனுக்குக் குணமுண்டாயிற்று என்று அவர்களிடத்தில் விசாரித்தான்... அவர்கள்: நேற்று ஏழாமணிநேரத்தில் ஜூரம் அவனை விட்டது என்றார்கள்... (பாருங்கள், அவன் அப்படியே சரியாகிக் கொண்டிருந்தான், அவனது உடல்நிலை சற்றே முன்னேற்றமடைந்து கொண்டிருந்தது.) உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்று இயேசு தன்னுடனே சொன்ன மணிநேரம் அதுவே என்று தகப்பன் அறிந்து, அவனும் அவன் வீட்டாரனைவரும் விசுவாசித்தார்கள். இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்குத் திரும்பிவந்தபின்பு, இது அவர் செய்த இரண்டாம் அற்புதம்.

16. நாம் நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம். கர்த்தாவே, இப்பொழுது இந்த ஆராதனை ஏறக்குறைய மீண்டும் தொடங்க ஆயத்தமாயுள்ளது, இது இங்கே இந்த மிக அருமையான ஜனங்கள் மத்தியில் கூட்டங்கள் முடிவடையும் இரவாக உள்ளது. தேவனே, நீர் என்னை மேலே கொண்டு வரும்படியாக அப்படிப்பட்ட ஒரு வழியில் எவ்வளவாக என்னை ஆசீர்வதித்தீர், மறுபடியும் பிறந்த கிறிஸ்தவர்களும், மிகவும் அருமையானவர்களுமாகிய அப்படிப்பட்ட ஒரு கூட்ட ஜனங்களிடத்தில் நின்று பேச கூடும்படிக்கு என்னை அனுமதித்தீர். ஓ தேவனே, நான் அதற்காக உம்மை நேசிக்கிறேன். இந்த ஊழியக்காரர்களை சந்திக்கவும், இங்கே வெளியேயுள்ள இந்த ஜனங்களாகிய, மிக அருமையான ஜனங்களாகிய உமது ஜனங்களைச் சந்திக்கவும் நீர் என்னை அனுமதித்ததற்காக, எனது நன்றிகளைக் கூறும்படியான எந்த வார்த்தைகளையும் என்னால் கண்டுபிடிக்கவே முடியவில்லை, இவர்கள் பூமிக்குரிய அறுவடையினுடைய விளைச்சலின் முதற்பலன்களாயிருக்கிறார்கள் (Very Cream Of Crop). அது மட்டுமல்ல, அவர்களை சந்திக்கவும், அவர்களை அறிந்து கொள்ளவும், ஆனால் அது உமது குமாரனாகிய கிறிஸ்து இயேசு மூலமாக அவர்களோடு ஐக்கியம் கொண்டிருக்கும்படியாக உள்ளது. நான் அவர்களோடு கூட ஒரு சக பிரஜையாயிருக்கிறேன் என்பதையும், தேவனுடைய அதே இராஜ்யத்தில் ஒரு சுதந்தரவாளியாக இருக்கிறேன் என்பதையும் அறியும் போது, நாங்கள் பூமியினூடாக பிரயாணம் செய்து, பரலோகத்திற்குப் போய்க் கொண்டிருக்கிறோம், அங்கே நாங்கள் முடிவில்லாத காலங்கள் முழுவதும் ஒன்றாக உடன் சேர்ந்து இருப்போம். காலங்களின் பல யுகங்கள் முழுவதும், நாங்கள் என்றென்றுமாக ஒன்றாயிருப்போம், அங்கே நாங்கள் மீண்டும் வியாதிப்பட மாட்டோம், அல்லது அங்கே நாங்கள் கட்டிடங்களுக்குள் இருந்து ஒருவருக்கொருவர் ஜெபிக்கும்படி தேசம் முழுவதும் தவழ்ந்து செல்ல வேண்டியிருக்காது, ஆனால் அங்கே எந்த வியாதியும் இருக்காது, முதுமை எதுவும் இருக்காது, அல்லது அங்கே எந்த முடவர்களோ அல்லது எந்த குருடர்களோ இருக்க மாட்டார்கள், ஆனால் நாங்கள் அங்கே என்றென்றுமாக வாலிபத்தோடே இருப்போம். நாங்கள் அவருடைய ரூபத்தில் (likeness) இருப்போம். அது என்னவொரு மகிமையான நேரமாயிருக்கும்.

17. ஓ பிதாவே, நீர் செய்திருக்கிற எல்லாவற்றையும் பாராட்டும்படி எனக்குள்ளே இருக்கிற உணர்ச்சியை வெளியிடுவதற்காக, நான் என்னுடைய கரங்களை உயர்த்தி, என்னால் எவ்வளவு கூடுமோ அவ்வளவு உரக்க சத்தமிட வேண்டும் போல் உணருகிறேன். கர்த்தாவே, இந்தப் பட்டணத்தை ஆசீர்வதியும், இந்த ஜனங்களை ஆசீர்வதியும், இந்தப் பட்டணத்தினுடைய சட்டமியற்றுபவர்களை (law makers - சட்டவல்லுநர்களை) ஆசீர்வதியும். மேலும் தேவனே, ஒரு பழைமை நாகரீகமான எழுப்புதல் இந்தப் பட்டணத்தில் வீசியடித்துச் செல்லும்படி அருளும், கர்த்தாவே. இன்றிரவு இங்கே இந்தப் பிரசன்னத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கும் இந்த அபிஷேகிக்கப்பட்டவர்கள், தேவனுடைய இந்த ஊழியக்காரர்கள் இங்கே இந்த மேடையின் மேல் பிரதிநிதித்துவம் வகித்தார்கள், மேலும் அங்கே வெளியே அந்தக் கூட்டத்தினரில் அப்படியிருந்தார்கள், ஓ தேவனே, புதிய தரிசனத்தோடு தங்களுடைய ஜீவியத்தை, புதிய வல்லமையோடு நிரப்புவார்களாக. கர்த்தாவே, எல்லாவிடங்களிலுமிருந்து, பெருமழையாய் சபைகளுக்குள் வருவதாக. இப்பொழுது உமது ஊழியக்காரனுடைய ஜெபத்தைக் கேட்டருளும். மேலும், இப்பொழுது, எப்போதுமே உமது சித்தத்தில் எங்களை வைத்தருளும்; இன்றிரவு எங்களுக்கு ஒரு மகத்தான ஆராதனையைத் தந்தருளும். உமது பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தில் நாங்கள் இதைக் கேட்கிறோம். ஆமென்.

18. சகோதரன் பாக்ஸ்டர் அவர்களே, பில்லி வெளியே போயிருக்கிறான் என்று நம்புகிறேன், அவர்கள் உள்ளே வரும்வரையில், சற்று பொறுத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது, விசுவாசம் கொண்டிருங்கள், சந்தேகப்படாதீர்கள். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். இந்தக் கூட்டங்கள் எல்லாவற்றினுடைய உச்சக்கட்டத்தை இன்றிரவு நாம் பார்ப்போம், நீங்கள் அதைச் செய்வீர்களா? நான் நம்புகிறேன், தேவன் கடந்த இரண்டு இரவுகள் நம்மிடம் வருகை தந்ததைப் போன்று, இந்த மூன்றாவது முறையும் நம்மிடம் விஜயம் செய்வாரானால், அது கேள்வியைத் தெளிவாக்கி விடும் என்று நம்புகிறேன், அவ்வாறு நீங்கள் நம்பவில்லையா? ஓ, கடிதங்கள் அதிக எண்ணிக்கையில் தொடர்ந்து வந்தவண்ணம் இருக்கின்றன, எனவே நான் அப்படியே... அவர்கள் ஏறக்குறைய எப்படியாக சுகமடைந்து, ஜனங்கள் வீட்டிற்குப் போய்க் கொண்டிருந்தார்கள் என்றும், கூட்டத்தை விட்டு வீட்டிற்குப் போய்க் கொண்டிருந்தார்கள் என்றும், அதன்பிறகு அங்கே ஒருக்கால் ஒரு சில மணி நேரங்களிலே, நீங்கள் அறியும் முதலாவது காரியம் என்னவென்றால், அவர்கள் அடுத்த நாள் காலையில் தூக்கத்தை விட்டு எழும்பும் போது, ஒருக்கால் அவர்கள் குருட்டுத்தன்மை (நீங்கி) பார்வை பெற்று விட்டதைக் குறித்து (அநேக) இடங்களிலிருந்து கடிதங்கள் பெரும் எண்ணிக்கையில் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன... ஓ, அப்படியே எல்லா காரியங்களும் சம்பவித்துக் கொண்டேயிருக்கின்றன. எவ்வளவு நன்றியுள்ளவனாயிருக்கிறேன். காரியம் என்னவென்றால், இங்கேயிருக்கும் ஜனங்களாகிய நீங்கள் - நீங்கள் அதைக் குறித்து மூன்றாம் (முறை) கேட்கும்படி வர மாட்டீர்கள். அது ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்குப் பிறகு.

19. இயேசு இங்கேயிருக்கிறார் என்பதை நீங்கள் கவனித்தீர்களா? அவர், ‘உன் குமாரன் பிழைத்திருக்கிறான்’ என்று கூறின போது. நல்லது, அது ஒரு நாளாக இருந்தது, அடுத்த நாள் அவன் அங்கே போய்க் கொண்டிருந்தான், அப்போது அவனுடைய குமாரனுடைய உடல்நலம் முன்னேற்றமடையத் (amend) தொடங்கியிருந்தது. அவர், ‘இது இயேசு செய்த இரண்டாம் அற்புதம்’ என்று கூறினார். நாம் அதை ஒரு அற்புதம் என்று அழைக்க மாட்டோம் என்பதாகத் தோன்றுகிறது. ஆனால் அது ஒரு அற்புதமாகத்தான் இருந்தது, ஏனென்றால் வழக்கத்திற்குப் மாறான எதுவும் ஒரு அற்புதம் தான். அந்த மனுஷனுடைய குமாரன் பிழைக்கப் போகிறான் என்று இயேசு அவனிடம் கூறினார், அந்த மனிதனும் இயேசு சொன்னதை விசுவாசித்தான். அது சரியா? அநேகமாக இன்றிரவு இங்கே 100 ஜெப அட்டைகள் உள்ளன. சற்று நேரத்தில், நான் அந்த ஜெப அட்டைகளில் ஏதோவொரு இடத்திலிருந்து அழைப்பேன். நல்லது அப்படியானால், நீங்கள், ‘சகோதரன் பிரன்ஹாமே, அப்படியானால், என்னுடைய ஜெப அட்டை அழைக்கப்படாவிட்டால், அதைக் குறித்து என்ன?’ என்று கேட்கலாம்.

20. அது உங்களால் - -உங்களால் சுகமாக முடியாது என்பதற்கு அர்த்தமல்ல. இயேசு கிறிஸ்து உங்களைச் சுகப்படுத்துகிறார் என்று விசுவாசிக்கிற நீங்கள் எங்கேயிருந்தாலும் சுகமடைய முடியும் (பாருங்கள்?), நீங்கள் எங்கேயிருந்தாலும். நீங்கள் எப்போதுமே அதை நினைவில் கொள்வீர்களா? அதை எப்போதும் நினைவில் வையுங்கள், சுகத்தைப் பெற்றுக்கொள்ளுதல்... கிறிஸ்துவினால் உங்களுக்காக செய்ய முடிந்தது எல்லாமே ஏற்கனவே செய்யப்பட்டாயிற்று. ஆமென். புரிகிறதா? கிறிஸ்துவும் தேவனும் உங்களுக்காக செய்யக்கூடிய எல்லாம் ஏற்கனவே செய்து முடிக்கப்பட்டு விட்டது. இப்பொழுது, அடுத்த காரியமாக உங்களுக்குள் வைக்கப்பட்டுள்ளது. நீங்கள் பாவியாக இருந்தால், இயேசு ஏற்கனவே உங்களை இரட்சித்திருக்கிறார், ஆனால் நீங்கள் - உலகத்தின் பாவத்தைப் போக்கும்படியாக அவர் மரித்த போது, (அது செய்யப்பட்டது), ஆனால் நீங்கள் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள், ‘சகோதரன் பிரன்ஹாமே, நீர் வீட்டிற்குப் போவதற்கான வழி பயணக் கட்டணத்தை நான் செலுத்தி விட்டேன்’ என்று கூறலாம். நல்லது, நான் அதை ஏற்றுக்கொண்டாலொழிய அது எனக்கு எந்த நன்மையும் செய்யாது. நீங்கள் அதை ஏற்றுக்கொள்ளும் மட்டுமாக கிறிஸ்துவினுடைய மரணம் உங்களுக்கு உதவி செய்யாது. இப்பொழுது, ‘அவருடைய தழும்புகளால் நீங்கள் குணமானீர்கள்.’ அவர் உங்களுக்காக பரிகாரத்தைச் செய்த போதே அவர் உங்களைக் குணமாக்கி விட்டார். ஆனால் இப்பொழுது, நீங்கள் அதை ஏற்றுக்கொள்ளும் மட்டுமாக அது உங்களுக்கு ஒருபோதும் எந்த நன்மையும் செய்யாது. நீங்கள் அதை ஏற்றுக்கொண்டு, அதை விசுவாசிக்கும் போது, அது உங்களுடையதாகி விடுகிறது. இப்பொழுது, பாருங்கள், அது உங்களைப் பொறுத்தது. இப்பொழுது, அவர் செய்கிற இந்தக் காரியங்கள், அந்தக் காரியங்களை நிரூபிக்கும்படியாக அவர் அடையாளங்களையும் அற்புதங்களையும் அனுப்புகிறார், அது--அது செய்யப்பட முடியும். இங்கே... நீங்கள் இந்த நபருக்கோ, அல்லது நான் உங்களிடம் கூறுகிற இந்த சாட்சிகளில் யாருக்காவது (கடிதம்) ஏழுத நான் விரும்புகிறேன், உங்களுக்கு விருப்பமானால், நீங்கள்--நீங்கள் அவர்களுக்கு எழுதுங்கள். ஜெபர்ஸன்வில்லிலிருந்து வந்திருக்கிறவர்கள் இங்கே யாராவது இருக்கிறீர்களா? ஜெபர்ஸன்வில்லிலிருந்து (அதைச்) சுற்றி எங்காவது இருக்கிறவர்கள், நாங்கள் உங்கள் கரங்களைப் பார்க்கட்டும். இங்கே பின்னால் ஒருவரை நான் காண்கிறேன், அவர் அங்கேயிருக்கிறார். சகோதரனே, உங்கள் பெயர் என்ன? நியூமன், அவர் ஜெபர்ஸன்வில்லிலிருந்து வந்திருக்கிறார். [அந்த சகோதரன் காதால் கேட்க முடியாதபடி பேசுகிறார் - ஆசிரியர்.] நல்லது அது...